அரம்கோ எண்ணெய் வயல் மீது ஆளில்லா விமானங்கள் தாக்கி அழித்தமை – ஒரு கண்ணோட்டம்

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம்
(
இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு)

Afbeeldingsresultaat voor saudi arabia oil refinery attack

லகின் எண்ணெய் வளம்கொழிக்கும் சவூதி அரே­பி­யாவில் சென்ற சனிக்­கி­ழமை செப்­டெம்பர் மாதம் 14 ஆம் திகதி அதி­காலை சவூதி அர­சுக்கு சொந்­த­மான அப்கைக் குராய்ஸ் பிர­தே­சங்­களில் அமைந்­துள்ள இரண்டு எண்ணெய் நிலைகள் மீது குறி வைத்து தாக்­கப்­பட்ட சம்­பவம் பூகோள ரீதி­யாக பாரிய அர­சியல், இரா­ணுவ, பொரு­ளா­தார அதிர்­வு­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அரம்கோ எனும் எண்ணெய் கம்­பனி இலங்கை உட்­பட தென்­னா­சிய நாடு­க­ளிலும் மிகவும் அறி­யப்­பட்ட கம்­ப­னி­. மத்­திய கிழக்கில் 70 களில் ஆரம்­பித்த எண்ணெய் வரு­மான செழிப்­பினால் சவூதி உட்­பட பல மத்­திய கிழக்கு நாடுகள் வெளி­நாட்­ட­வர்­களை பல­த­ரத்­திலும், மட்­டத்­திலும் வேலைக்­க­மர்த்­தின. அரம்கோ எனும் கம்­ப­னியில் தொழில் பெறு­வது பாது­காப்­பா­ன­தா­கவும், ஊதியம் தொடர்­பான நன்­மை­க­ளுக்கும் கரு­தப்­பட்­டது. ஆங்­கி­லத்தில் ARAMCO என்ற பெயர் அரே­பியா, அமெ­ரிக்க ஆகிய சொற்­களை இணைத்து பெய­ரி­டப்­பட்­டதன் மூலம் பெருமை பெற்­றது. அரம்கோ எண்ணெய் நிலைகள் மீது ஈரான் தாக்­குதல் மேற்­கொண்டது என அமெ­ரிக்கா, சவூதி அரே­பியா குற்றம் சாட்­டி­யுள்ள வேளை, இத்­தாக்­குதல் ட்ரோன் தொழில்­நுட்­பத்­துடன் ஆளில்லா விமா­னங்­களால் நிகழ்த்­தப்­பட்­ட­தாக உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. இத்­தாக்­கு­த­லுக்கு யேமன் கூத்தி கிளர்ச்­சி­ய­மைப்பு உரிமை கோரி­யுள்­ளது. சவூதி அரே­பி­யாவின் எண்ணெய் உற்­பத்தி இத்­தாக்­கு­தலால் சரி அரை­வா­சி­யாக குறை­ந்­துள்­ளது. சவூதி அரே­பியா உலக எண்ணெய் உற்­பத்­திமூலம் பத்து வீத மசகு எண்­ணெ­யை உற்­பத்தி செய்­கி­றது. சவூதி அரே­பி­யாவில் நாள் ஒன்­றுக்கு 11 மில்­லியன் பீப்­பாய்கள் விநி­யோகம் செய்­யப்­ப­டு­கின்­றன. இத்­தாக்­கு­தலால் ஏற்­பட்ட உற்­பத்தி வீழ்ச்­சியால் நாள் ஒன்­றுக்­கான உற்­பத்தி 5.7 மில்­லியன் பீப்­பாய்­க­ளாக குறைந்­துள்­ளது. கூத்தி கிளிர்ச்சி அமைப்பு இத்­தாக்­கு­த­லுக்கு உரி­மை­கோ­ரி­யது மட்­டு­மல்ல, எதிர்­கா­லத்தில் மேலும் பல தாக்­கு­தல்­களை சவூதி எதிர்­பார்க்­கலாம் என்றும் சவூதி அரே­பி­யாவின் மரி­யா­தைக்­கு­ரிய மனி­தர்­களின் உத­வி­யுடன் இத்­தாக்­குதல் நடத்­தப்­பட்­டது எனவும் கூறி­யுள்­ளது. 2006 இல் அல் கொய்தா இதே எண்ணெய் நிலை­யத்தை குறி­வைத்து தாக்­கி­யது. ஆனால் முன்­னெச்­ச­ரிக்­கை­யுடன் செயற்­பட்ட சவூதி படைகள் தாக்­கு­தலை முறி­ய­டித்­தனர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. கூத்தி கிளைர்ச்­சி­யா­ளர்­களின் தாக்­கு­தலின் பின்னர் சவூ­தியின் முடிக்­கு­ரிய இள­வ­ரசர் முஹம்­மது பின் சல்மான், அமெ­ரிக்க அதிபர் ட்ரம்­புடன் உரை­யா­டும்­போது சவூதி அரசு பதில் தாக்­கு­தல்கள் நடத்த தயார் நிலையில் ஆற்­ற­லு­டனும் இருப்­ப­தாக கூறினார். சவூ­தியின் பாது­காப்பு குறித்து ஒத்­து­ழைப்­புடன் செய­லாற்ற அமெ­ரிக்கா தயார் நிலையில் இருப்­ப­தாக அந்நாட்டு அதிபர் கூறி­யுள்ளார். அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்சர் மைக்­பொம்­பியோ இத்­தாக்­கு­த­லுக்கு ஈரானை குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார். இத்­தாக்­குதல் யேம­னி­லி­ருந்து நிகழ்த்­தப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை எனக்­கூ­றி­யுள்ளார். அமெ­ரிக்க கூட்­டணி நாடு­க­ளுடன் இணைந்து எண்ணெய் விநி­யோகம் தடை­பெ­றாமல் சீராக இயங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்கும் என அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்சர் கூறி­யுள்ளார். இக்­குற்­றச்­சாட்­டுக்கு பதி­ல­ளித்த ஈரான் அமெ­ரிக்­காவின் குற்­றச்­சாட்டு அர்த்­த­மற்­றது எனவும் விளங்­கிக்­கொள்ள முடி­ய­வில்லை எனவும் தெரி­வித்­துள்­ளது. அரம்கோ எண்ணெய் நிலைகள் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் ஈரான் இருப்­ப­தா­கவும் அக்­குற்­றச்­சாட்­டுக்கு ஆதா­ர­மாக செய்­மதி படங்கள் மற்றும் உளவுத் தக­வல்­க­ளையும் அமெ­ரிக்கா கூறி­யுள்­ளது. தாக்­குதல் வந்த திசை, அளவு ஆகி­ய­வற்றை நோக்­கும்­போது தீவி­ர­வாத இயக்­க­மான கூத்தி அமைப்­புக்கு இத்­த­கைய ஆற்றல் உள்­ளதா என்ற கேள்­வியும் எழுந்­துள்­ளது எனவும், அமெ­ரிக்கா கூறு­கி­றது. 

எதிலும் முந்திக் கொண்டு டுவிட்டர் பதி­வு­களை மேற்­கொள்ளும் அமெ­ரிக்க அதிபர் ட்ரம்ப் அடக்கி வாசித்­துள்ளார். ஈரானை நேர­டி­யாக குற்­றஞ்­சாட்­டு­வதைத் தவிர்த்­துள்ளார். இத்­தாக்­கு­த­லுக்கு பின்னால் இருக்கும் குற்­ற­வா­ளி­களைத் தெளி­வாக அடை­யாளம் கண்ட பின் அமெ­ரிக்கா  ரா­ணுவ நட­வ­டிக்கை மேற்­கொள்ளும் என டுவிட்­டரில் பதி­விட்­டுள்ளார். இத்­தாக்­குதல் பல தளங்­களில் ஆரா­யப்­பட வேண்டும். யேமனில் நிகழும் உள்­நாட்­டுப்போர்  அதில் ஈடு­பட்­டுள்ள வெளி­நாட்டு உள்­நாட்டு சக்­திகள், சிரி­யாவில் நடை­பெறும் உள்­நாட்­டுப்போர் பிராந்­தி­யத்தில் ஆதிக்­கத்தை நிலை­நாட்ட முயலும் சவூதி அரே­பியா, ஈரான் நாடு­களின் முரண்­பாடு, அணு ஆயுதத் தயா­ரிப்பு தொடர்­பாக ஈரான் மீது அமெ­ரிக்கா விதித்த ஒரு தலை­ப்பட்­ச­மான பொரு­ளா­தா­ரத்­தடை ஆறு நாடுகள் கைச்­சாத்­திட்ட ஈரானின் அணு ஆயுத நட­வ­டிக்­கை­களைக் கட்­டுப்­ப­டுத்தும் ஒப்­பந்­தத்தை ஒரு தலைப்­பட்­ச­மாக அமெ­ரிக்கா நிரா­க­ரித்­தமை சவூதி அரே­பி­யாவின் தலை­மையில் ஐக்­கிய அரபு இராச்­சியம், பஹ்­ரெயின், எகிப்து ஆகிய நாடுகள் கட்டார் நாட்­டுடன்  ரா­ஜ­தந்­திர உற­வு­களை ஆனி 2017 இல் துண்­டித்து தரை, வான், கடல் முற்­று­கை­களை மேற்­கொண்­டமை, பாலஸ்­தீன விவ­கா­ரத்தில் முரண்­படும் சவூதி, ஈரான், கட்டார், ஆகிய நாடு­களின் நிலைப்­பாடு ஆகிய கார­ணிகள் நீண்ட கண்­ணோட்­டத்தில் இத்­தாக்­கு­தலில் தொடர்­புப்­ப­டு­கின்­றன என்­பதை மறுக்க முடி­யாது. இரண்டாம் உல­கப்போர் முடி­வுக்கு வந்த பின்னர் அமெ­ரிக்­காவும், சோவி­யத்­ யூ­னி­யனும் உலகின் மீது ஆதிக்கம் செலுத்­திய பனிப்போர் முடி­வ­டைந்த பின்னும், உலகின் சர்ச்­சை­களும், போர்­களும், அக­திகள் தொகை பெரு­கு­வதும், நூற்­றுக்­க­ணக்­கான உயிர்கள் பலி­யா­வதும், பெறு­ம­தி­யான உட்­கட்­ட­மைப்பு வச­திகள் சிதை­வதும் தொடர்­க­தை­யா­கவே உள்­ளது. அது­மட்­டு­மல்ல, உல­கச்­சந்­தையில் பீப்பாய் ஒன்றின் விலை 60 டொலர்­க­ளாக உயர்ந்­துள்­ளது. உலகப் பொரு­ளா­தா­ரத்தின் மீது மோச­மான விளை­வு­களை இத்­தாக்­குதல் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

Abqaiq oil refinery, Saudi Arabia

யேமன் நில­­ரத்தை பார்ப்­பது அவ­சி­­மானது 

கூத்தி கிளிர்ச்­சி­யா­ளர்கள் யேமன் நாட்டின் பெரும்­ப­கு­தியை கைப்­பற்­றி­யதன் கார­ண­மாக யேமன் ஜனா­தி­பதி மன்சூர் வெளி­நாட்­டுக்கு தப்பி ஓடினார். 2015 மார்ச்சிலி­ருந்து உள்­நாட்­டுப்போர் நடை­பெ­று­கி­றது. சியா முஸ்­லிம்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் கூத்தி அமைப்­புக்கு ஈரான் வெளிப்­ப­டை­யாக உதவி வரு­கின்­றது. யேமன் அர­சுக்கு சவூதி தலை­மை­யி­லான கூட்­டணி ஆத­ர­வாக செயற்­ப­டு­வ­துடன், சவூதி அரே­பியா நேர­டி­யாக கூத்தி கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக தாக்­கு­தல்­களை நடத்­து­கி­றது. அமெ­ரிக்கா, சவூதி கூட்­ட­ணிக்கு பக்­க­ப­ல­மா­க­வுள்­ளது. 2015 இல் ஆரம்­ப­மான உள்­நாட்­டுப்­போரில் 7000 க்கு மேற்­பட்ட பொது மக்கள் கொல்­லப்­பட்­ட­தா­கவும், சனத் தொகையில் 80 வீத­மான 24 மில்­லியன் பொது­மக்கள் மனி­தா­பி­மான உத­வி­க­ளுக்­காக கோரிக்கை விடுக்­கி­றார்கள் எனவும் 10 மில்­லியன் மக்கள் வெறு­மனே உயிரைக் கையில் பிடித்து வாழ­வேண்­டிய சூழ்­நி­லைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளார்கள் எனவும், சில தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. யேமன் உள்­நாட்­டுப்­போரில் ஈரானும், சவூதி அரே­பி­யாவும் தீவி­ர­மாக ஈடு­ப­டு­வது  ர­க­சி­ய­மா­ன­தல்ல. கூத்தி கிளர்ச்சி இயக்கம் நவீன ஆயு­தங்­களை பயன்­ப­டுத்­து­வ­தென்­பது நிச்­ச­ய­மாக ஈரானின் உதவி, ஒத்­து­ழைப்­பினால் என்­பதும்  ர­க­சி­ய­மா­ன­தல்ல. சர்­வ­தேச தளங்­களில் வல்­ல­மை­யுள்ள நாடுகள் ஏனைய சிறிய பல­வீ­ன­மான அயல் நாடு­களில் அர­சியல்,  ரா­ணுவ சுய­ந­லன்­க­ளுக்­காக  ரா­ணுவ ரீதி­யாக தலை­யி­டு­வதும் அண்­மைக்­கால சர்­வ­தேச அர­சியல் நிகழ்­வு­களை அவ­தா­னிப்­ப­வர்­க­ளுக்கு இய­லா­த­தொன்­றல்ல. அவ்­வாறே ஈரானும் மறுத்து, துணிந்­தாலும் ஈரானின் ஆத­ர­வு­டனே இத்­தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தென்­பதை அனு­மா­னிப்­பதில் சங்­க­டங்கள் ஏதும் கிடை­யாது. எனினும் அமெ­ரிக்­காவின் ஒரு தலைப்­பட்­ச­மான, தான்­தோன்­றித்­த­ன­மான பொரு­ளா­தாரத் தடைகள், ஈரானை வெறு­மனே கைகட்­டிப்­பார்த்துக் கொண்­டி­ருக்க தூண்­ட­மாட்­டாது. ஈரானின் பிர­தம ரா­ணுவத் தள­ப­தியின் பதி­லடி மிகவும் காத்­தி­ர­மான செய்­தியை அமெ­ரிக்­கா­விற்கும், சவூ­திக்கும் கொடுத்­துள்­ளது என்­ப­து­மட்டும் நிச்­ச­ய­மா­னது. முழு அள­வி­லான யுத்­தத்­திற்கு ஈரான் தயா­ராக இருப்­ப­தாக அவர் மார்­தட்­டி­யுள்ளார். ”எமது எச்­ச­ரிக்கை மறை­மு­க­மா­ன­தல்ல. ஈரா­னி­ட­முள்ள ஏவு­க­ணைகள் ஈரான் எல்­லை­யி­லி­ருந்து 2000 கி. மீற்றர் தூரத்­திற்குள் நிலை கொண்­டுள்ள அமெ­ரிக்க தளங்­க­ளையும் யுத்தக் கப்­பல்­க­ளையும் தாக்கும் ஆற்­ற­லுள்­ளவை” என்றும் உரத்துக் கூறியுள்ளார். தற்­போது ஏற்­பட்­டுள்ள பதற்­றத்தால் பிராந்­தியத்தில் எப்­போதும் யுத்தம் வெடிக்­கலாம் என்ற நிலைக்குள் அகப்­பட்­டுள்­ளது என்கின்றார். அரம்கோ எண்ணெய் வயல் தாக்­கு­தல்­க­ளுக்கு அமெ­ரிக்கா  ரா­ணுவ ரீதி­யாக பதி­ல­ளிக்­கு­மாயின் கட்­டா­ரி­லுள்ள அல் உதையித்  ரா­ணு­வத்­தளம் ஐக்­கிய அரபு  ராச்­சி­யத்­தி­ல­மைந்­துள்ள டவ்றா விமா­னப்­ப­டைத்­தளம் ஈரானின் தாக்­கு­த­லுக்கு உள்­ளாகும் எனவும் எச்­ச­ரித்தார். சில வாரங்­க­ளுக்கு முன்னர் ஈரா­னிய வான் பரப்­பினுள் அமெ­ரிக்­காவின் ஆளில்­லாத ட்ரோன் விமானம் ஈரா­னிய படை­களால் சுட்டு வீழ்த்­தப்­பட்­ட­தையும் தள­பதி நினைவுகூர்ந்தார். அமெ­ரிக்க அர­சாங்­கத்­திற்­குள்ளும் ஈரா­னிய அர­சாங்­கத்­திற்­குள்ளும் யுத்­தத்தை விரும்­பு­ப­வர்கள் இருக்­கி­றார்கள் என்­பதை பெயர் குறிப்­பி­டாத உய­ர­தி­காரி ஒரு­வரை மேற்­கோள்­காட்டி அல் – ஜசீரா செய்தி வெளி­யிட்­டுள்­ளது. பெயர் குறிப்­பி­டாத உய­ர­தி­காரி மேலும் ஈரா­னிய அமெ­ரிக்க மோதல் பேர்­சியன் குடா­வட்­ட­கைக்குள் அமைந்­துள்ள முழு நாடு­க­ளையும் உள்­ள­டக்கி பெரும் சேதத்தை உண்­டாக்கும் எனவும் தெரி­வித்தார். எனினும் வட கொரிய விவ­கா­ரத்தில் ட்ரம்ப் நேரத்­துக்கு நேரம் வெவ்­வேறு வித­மாக பேசி­னாலும் சில சம­யத்தில் யுத்த பேரி­கையை முழங்­கி­னாலும் வட கொரி­யாவுடன்  இணக்­க­மான போக்கை கடை­பி­டிக்­கின்றார் என்­பது தெளி­வாகத் தெரி­கி­றது. ஜனா­தி­பதி ட்ரம்ப் சீனா­வுடன் வர்த்­த­கப்­போரை உரு­வாக்­கினார். ஆனால் நிஜ­மான நீண்­ட­கா­லத்தில் தீமை பயக்கும் போர்­களை ஏற்­ப­டுத்­து­வதில் தயங்­கி­ய­வ­ராக காணப்­ப­டு­கிறார். அமெ­ரிக்க முன்னாள் பாது­காப்பு உதவி அமைச்சர் நில­வரம் பற்றி ஊட­கங்­க­ளுக்கு பேட்­டி­ய­ளிக்­கையில் அமெ­ரிக்கா, யேமனில் நடை­பெறும் உள்­நாட்டு யுத்­தத்­தி­லி­ருந்து வெளி­யேற வேண்டும் என்றார். 

Abqaiq oil refinery, Saudi Arabia

ஜனா­தி­பதி ட்ரம்ப் உரத்­துப்­பே­சுவார் வார்த்தை ஜாலங்­களை அள்ளி வீசுவார். ஆனால் யுத்­தங்­களை ஆரம்­பிக்க தயங்­குவார். கூறி­ய­வற்றை நிறை­வேற்­ற­மாட்டார் எனவும் அவர் கூறினார். அமெ­ரிக்­காவில் 2020 இல் நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிட விரும்பும் ஜன­நா­யகக் கட்சி செனட்டர் சாண்டால் ஈரா­னுடன் மோது­தலை தவிர்க்க வேண்டும் என்றார். ஜனா­தி­பதி யுத்­தத்தை பிர­க­ட­னப்­ப­டுத்த முடி­யாது. அமெ­ரிக்க பாரா­ளு­மன்­ற­மான காங்­கிரஸ் மட்­டுமே யுத்தப் பிர­க­டனம் செய்யும் அதி­கா­ர­மு­டைய நிறு­வ­ன­மாகும் எனக் கூறினார். சர்­வா­தி­கார சவூதி அர­சாங்­கத்தின் கொடு­மை­க­ளுக்கு அமெ­ரிக்கா துணை போகக்­கூ­டாது என்றும் மத்­திய கிழக்கில் இன்­னு­மொரு யுத்­தத்தை ஆரம்­பிக்­கக்­கூ­டாது எனவும் தெரி­வித்தார். ஈரான், அமெ­ரிக்கா தக­ராறு மத்­திய கிழக்கில் இன்­னு­மொரு யுத்­தத்தை தோற்­று­விக்­குமா என்­பது உலகம் பூராவும் பல ஊட­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. 

அரம்கோ எண்ணெய் வயல்­களின் மீது தொடுக்­கப்­பட்ட தாக்­கு­தலும் ஓர் இரவில் அரை­வா­சி­யாக வீழ்ச்­சி­ய­டைந்த சவூதி எண்ணெய் உற்­பத்தி பல தேசிய  அர­சாங்­கங்­களை மாற்று ஏற்­பா­டுகள் பற்றி திட்­டங்­களை வகுக்கத் தூண்­டி­யுள்­ளது. சடு­தி­யாக பீப்பாய் ஒன்றின் விலை 60 டொல­ராக உயர்ந்­ததால் உலகப் பொரு­ளா­தா­ரத்­திற்கும் ஏற்­ப­டக்­கூ­டிய பாத­க­மான தாக்­கு­தல்கள் குறிப்­பாக அபி­வி­ருத்­தி­ய­டைந்­து­வரும் நாடு­களில் பொரு­ளா­தார சமூக தாக்­கங்­களை உரு­வாக்கும் முன்னர் ஈராக் – குவைத்தின் மீது படை­யெ­டுத்­த­போதும், ஈராக் உள்­நாட்டு யுத்­தத்­தின்­போதும் உலக எண்ணெய் உற்­பத்தி குறை­ந்து விலைகள் அதி­க­ரித்­தன. அமெ­ரிக்க தற்­போது ஏற்­பட்­டுள்ள விலை உயர்வைத் தணிப்­ப­தற்கு களஞ்­சி­யத்­தி­லி­ருந்து ஒரு தொகை எண்ணெய் பீப்­பாய்­களை சந்­தைக்கு வெளி­யிட்­டுள்­ளதால் எண்ணெய் விலை சற்று குறைந்­துள்­ளது. சவூதி அரே­பி­யாவின் விநி­யோகம் அரை­வா­சி­யாக குறைந்­ததால் ரஷ்யா போன்ற நாடுகள் கூடு­த­லான எண்ணெய் வரு­மா­னத்தை ஈட்டும் சூழ்­நிலை உரு­வா­கி­யுள்­ளது. ஏனைய ஒபெக் நாடு­களும் வரு­மா­னத்தை ஈட்­டு­வ­தற்கு தடை­யொன்றும் இல்லை. ஆனால் அமெ­ரிக்கா, சவூதி அரே­பிய நாடுகள் எண்ணெய் மூலம் அதிக வரு­மானம் ரஷ்யா ஆகிய நாடு­க­ளுக்கு செல்­லக்­கூ­டாது என்­பதை பொரு­ளா­தார ஆயு­த­மாக பயன்­ப­டுத்­தியது. எண்ணெய் விலையில் பாரிய அதி­க­ரிப்பை ஏற்­ப­டுத்­து­வதை அமெ­ரிக்கா, சவூதி அரே­பியா தவிர்த்து வந்­தன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஆனால் சனிக்­கி­ழமை தாக்­குதல் சமன்­பாட்டை மாற்­றி­விட்­டது. அமெ­ரிக்கா அதிபர் 2020 ஆம் ஆண்டில் இரண்­டா­வது தட­வை­யாக அமெ­ரிக்க அதிபர் பத­விக்கு போட்டி போட­வுள்ள சூழ்­நி­லையில் அமெ­ரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒவ்­வொரு கால­டி­யையும் நிதா­ன­மா­கவே எடுத்து வைக்க வேண்­டி­ய­வ­ராக இருக்­கிறார். ஈராக், வியட்நாம் போன்ற பெரும் செல­வுள்ள யுத்­தத்­தைப்­போன்று இன்­னொரு யுத்த முனையைத் திறந்து அமெ­ரிக்க மக்­களின் வாழ்க்கைத் தரங்­களை தாழ்த்தி வாக்­கு­களை இழப்­பதை விரும்­ப­மாட்டார். உள்­நாட்டில் செல்­வாக்கை அதி­க­ரிக்க வேண்­டு­மானால் அமெ­ரிக்க மக்­களின் பொரு­ளா­தார செழிப்­புக்­கான சந்­தர்ப்­பங்­களை அதி­க­ரிக்க வேண்டும். ஈரான் நெருக்­கடி, சீனா­வுடன் வர்த்­த­கப்போர், வட­கொ­ரி­யா­வுடன் அணு வலு­வேற்றம் தொடர்­பான சிக்கல், மத்­திய கிழக்கில் சிரியா, யேமன் உள்­நாட்டுப் போர்கள், ஆப்­கா­னிஸ்­தானில் தலிபான் கிளிர்ச்­சி­யா­ளர்­க­ளு­ட­னான மோதல் போன்ற சர்­வ­தேச விவ­கா­ரங்­களை கால நிலை மாநாட்­டி­லி­ருந்து விலக்­கி­யமை உள்­நாட்டில் ட்ரம்­புக்கு எதி­ரான அபிப்­பி­ரா­யங்­களை உரு­வாக்­கி­யுள்­ளன. இவ்­வா­றான சூழ்­நி­லையில் அமெ­ரிக்கா ஈரா­னுடன்  ரா­ணுவ மோதலை உரு­வாக்­க­மாட்­டாது என்­பதை துணிந்து கூறலாம்.

Afbeeldingsresultaat voor saudi arabia oil refinery attack

சவூதி அரே­பி­யாவில் எண்ணெய் வயல்கள் தாக்கி அழிக்­கப்­பட்­டமை இலங்­கை­யிலும் எரி­பொ­ருட்­களின் விலை­களை அதி­க­ரிக்க வேண்­டிய கட்­டா­யத்தை உரு­வாக்கும். எவ்­வ­ள­வுதான் சொந்­தக்­காலில் நிற்போம், மாற்றுத் திட்­டங்­களை கைவசம் வைத்­தி­ருக்­கி­றோ­மென தலை­வர்கள் கூறி­னாலும், சர்­வ­தேச அர­சியல் பொரு­ளா­தார அதிர்­வுகள் உள்­நாட்டில் எதிர்த்­தாக்­கங்­களை நிச்­ச­ய­மாக உரு­வாக்கும். தொடர்ச்­சி­யாக இலங்­கையில் எரி­பொருள் விலை­களில் ஏற்­பட்ட மாற்­றங்­களை கால அடிப்­ப­டையில் நோக்­கினால் இவ்­வி­டயம் புல­னாகும். அண்மைக் காலங்­களில் இலங்கை ரூபா தொடர்ந்து பெறு­மதி வீழ்ச்சி அடை­வதும், பொருட்­களின் விலை­வாசி அதி­க­ரிப்­பதும் கண்­கூடு. உலக சந்­தையில் எண்ணெய் விலை அதி­க­ரிப்பு நிச்­ச­ய­மாக இலங்­கையின் இறக்­கு­மதிச் செலவு அதி­க­ரித்து வர்த்­தக மீதியில் பாத­க­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்தப் போகி­றது. அழிந்­து­போன எண்ணெய் வயல்கள் விரை­வாக செப்­ப­னி­டப்­பட்டு உற்­பத்தி விரைவில் மீள ஆரம்பிக்கப்படும் என்பது உற்சாகமான நிலைப்பாடக இருந்தாலும் நடைமுறையில் தாமதம் ஏற்படவே செய்யும். இலங்கை மட்டுமல்ல உலகம் முழுவதும் எண்ணெய் விலை உயர்வு அழுத்தத்தை கொடுக்கும் என்பது யதார்த்தமானது.

-வீரகேசரி
செப்டம்பர் 21, 2019

Tags: