இலங்கைக்கான Aeroflot விமான சேவை இடைநிறுத்தம்

ஷ்யாவின் Aeroflot  – Russian Airlines விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளியே செல்ல முடியாதவாறு கடந்த ஜூன் 2ந் திகதியிலிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

தங்களது விமானம் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ள ரஷ்யாவின் Aeroflot விமான சேவை, இலங்கைக்கான அனைத்து விமான சேவைகளை இடைநிறுத்துவதாகவும், அனைத்து விமான பயணச்சீட்டு விநியோகத்தையும் இடைநிறுத்துவதாக தெரிவித்துள்ளது.

இதேவேளை, ரஷ்யாவிலுள்ள இலங்கை தூதுவரை, ரஷ்ய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அழைத்து, குறித்த விடயம் தொடர்பில் தங்களது விசனத்தை வெளியிட்டுள்ளதுடன், இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான பாரம்பரியமான நட்பிற்கு குந்தகம் ஏற்படாதிருக்கும் வகையில், இவ்விடயத்தை மிக விரைவாக தீர்க்குமாறு தெரிவித்துள்ளது.

191 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் கடந்த ஜூன் 02 ஆம் திகதி கட்டுநாயக்க, (BIA) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ரஷ்யாவின் மொஸ்கோ நகரிற்கு புறப்படவிருந்த Aeroflot – Russian Airlines, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தினால் (Commercial High Court) பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவின் பேரில் நாட்டிலிருந்து செல்ல அன்றையதினம் (02) தடை விதிக்கப்பட்டது.

வழக்கின் முழு விபரம்

அயர்லாந்து நிறுவனமான Celestial Aviation Trading Limited நிறுவனம் தாக்கல் செய்த முறைப்பாட்டினை விசாரித்த கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்ற நீதிபதி ஹர்ஷ சேதுங்கவினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த தடை உத்தரவு வரும் எதிர்வரும் 16ம் திகதி வரை நடைமுறையில் இருக்கும்.

இலங்கையில் உள்ள விமான நிலையங்களில் ரஷ்ய விமானங்கள் தடுத்து வைக்கப்படாது அல்லது கைது செய்யப்பட மாட்டாது என குடியியல் விமானப் போக்குவரத்து அதிகாரசபை இந்த ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் திகதி ரஷ்ய கூட்டமைப்பின் மத்திய போக்குவரத்து நிறுவனத்திற்கு எழுத்துப்பூர்வமாக உறுதியளித்த போதிலும் விமானம் தடுத்து வைக்கப்பட்டது.

இந்தநிலையில் மொஸ்கோ செல்லும் விமானத்தை இலங்கையில் இருந்து புறப்படவிடாமல் பிறப்பித்த தடை உத்தரவை ரத்து செய்யுமாறு ரஷ்யாவின் முதன்மையான ஏரோஃப்ளோட் நிறுவனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் நேற்று (ஜூன் 03) கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பான நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​குறித்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதியான கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமித் தர்மவர்தன முன்னிலையாகியிருந்தார்.

சர்வதேச மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களின்படி, விமானங்கள் புறப்படுவதற்குத் தேவையான வசதிகள் வழங்கப்படுவதை உறுதிசெய்யும் சட்டப்பூர்வ அதிகாரம் குடியியல் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு இருப்பதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

எனினும் அவ்வாறான தடை உத்தரவை பிறப்பிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என மேலதிக மன்றாடியார் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரஷ்யாவின் பிரதான விமான சேவை நிறுவனமான Aeroflot சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, முறைப்பாட்டாளரின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்த தடை உத்தரவு பெறப்பட்டதன் அடிப்படையில் இடைநிறுத்த உத்தரவை பிறப்பிக்குமாறு கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்திடம் கோரினார்.

இதனையடுத்து இந்த கோரிக்கையை ஜூன் 08 ஆம் திகதி பரிசீலிக்க நீதிமன்றம் முடிவு செய்தது.

விமான நிலைய மற்றும் விமான சேவைகள் (Airport & Aviation Services) நிறுவன அறிக்கை:

Tags: