இலங்கையில்159 பேர் உயிரிழப்பு : 203 பேர் காணாமல் போயுள்ளனர்

இலங்கையில் திட்வா புயலினால் எற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 159 ஆக உயர்ந்துள்ளதாக, இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தோர் எண்ணிக்கை 159 ஆகவும் காணாமல் போனோர் எண்ணிக்கை 203 ஆகவும் அதிகரித்துள்ளது. 2,34, 503 குடும்பங்களை சேர்ந்த 8,33, 985 பேர்பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், 34,198 குடும்பங்களைச் சேர்ந்த 122,822 பேர் 919 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், 105 பேர் காணாமல் போயுள்ளனர்
பதுளை மாவட்டத்தில் 52 பேர் உயிரிழந்துள்ளதுடன், 42 பேர் காணாமல்போயுள்ளனர்.
மாத்தளை மாவட்டத்தில் 12 பேரும், கேகாலை மாவட்டத்தில் 9 பேரும் பலியாகியுள்ளனர். அந்த மாவட்டங்களில் முறையே 4 மற்றும் 24 பேர் காணாமல்போயுள்ளனர்.
வங்கக்கடலில் உருவாகியுள்ள திட்வா புயல் காரணமாக, இலங்கை முழுவதும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், இலங்கையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை வெளிப்படுத்தும் படங்கள் சில…







