சிரியாவிலும் ஈராக்கிலும் ஐ.எஸ் உடன் இணைந்திருந்தவர்களே இலங்கையில் தாக்குதலை நடத்தியுள்ளனர்!

-ரஸ்ய பாதுகாப்பு அதிகாரி

Afbeeldingsresultaat voor Yuri KoKov

முன்னர் சிரியாவிலும் ஈராக்கிலும் ஐ.எஸ். இயக்கத்துடன் இணைந்து போரிட்டவர்களே இலங்கையின் ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களாவர் என ரஸ்யாவின் பாதுகாப்புச்சபையின் உதவி செயலாளர் யூரி கொகோவ் (Yuri KoKov)  கூறியிருக்கிறார்.

ரஸ்ய நகரான உஃபாவில் (Ufa)  நடைபெற்ற பாதுகாப்பு விவகாரங்கள் சம்பந்தமான 10ஆவது உயர்மட்ட அதிகாரிகளின் சர்வதேச மாநாட்டில் பேசும்போதே அவர் இக்கருத்தைத் தெரிவித்திருக்கிறார். அவர் அங்கு பேசும்போது மேலும் கூறியதாவது:

“வல்லுனர்களின் கணிப்பீட்டின்படி இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் சர்வதேச ஐ.எஸ். அமைப்புகளின் அடிப்படையிலான ஜிகாத் சிந்தனையைக் கொண்ட உள்ள+ர் ஆதரவாளர்களினால் நடத்தப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது. இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் சிரியாவிலும் ஈராக்கிலும் ஐ.எஸ். அமைப்புடன் இணைந்து போரிட்ட பின்னர் இலங்கை திரும்பிய உள்ள+ர்வாசிகளாவர்.

தற்போது ஐ.எஸ். இயக்கத்தின் பிரதான பயங்கரவாத நடவடிக்கைகள் மத்திய கிழக்கு, தென் மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய பிரதேசங்களை மையப்படுத்தி உள்ளது. முன்னர் ஐ.எஸ். தீவிரவாதிகள் தமது ஆதரவாளர்களை ஈராக்கை நோக்கியும் சிரியாவை நோக்கியும் செல்லுமாறு கூறியிருந்தனர். ஆனால் தற்போது அவர்கள் தமது ஆதரவாளர்களை தத்தமது சொந்த நாடுகளில் தங்கியிருந்து ஜிகாத் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கும் ஐ.எஸ். புயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளது. ஏற்கெனவே அவர்களால் நெதர்லாந்து, நோர்வே, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன.

வலதுசாரி தீவிரவாதிகளின் கடும் போக்குக் காரணமாகவே மேற்கில் பயங்கரவாத செயற்பாடுகள் அதிகரித்துச் செல்கின்றன. இதற்கு நியூசிலாந்தில் பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் உதாரணம். இந்த நிலைமையில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்கள் என்ன வடிவத்தில் வரும் என்பதைச் சொல்ல முடியாமல் உள்ளது.”

இவ்வாறு ரஸ்ய உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

Tags: