யாழ்,பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதிபர் பதவியிலிருந்து இடைநிறுத்தம்!

Afbeeldingsresultaat voor raping women

ருத்தித்துறை புனித தோமையார் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலையின் அதிபரை உடனடியாக பதவியிலிருந்து இடைநிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் அவர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

குறித்த பாடசாலை 8 வயது மாணவி ஒருவர் அதே பாடசாலையின் ஆசிரியரினால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக, குறித்த மாணவியின் பெற்றோர் அதிபருக்கு முறையிட்டும், அதிபர் பொலிசாருக்கு இது தொடர்பில் அறிவிக்காமல் இந்த சம்பவத்தினை மூடிமறைக்க முயற்சித்தாரென ஆளுநரின் விசேட செயலணியின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த பாடசாலையின் அதிபரை உடன் அமுலுக்கு வரும் வகையில் தற்காலிக இடைநிறுத்தம் செய்வதற்கு ஆளுநர் அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு ஆளுநருக்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு விசாரணைக் குழுவொன்றினையும் நியமிக்குமாறும் ஆளுநர், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலனுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குறிப்பிடப்படும் குறித்த ஆசிரியரும் விசாரணைகள் முடியும்வரை சேவையிலிருந்தும் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் வடமாகாணத்தில் இடம்பெறுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. இவ்வாறு மோசமாக நடந்து கொள்பவர்களின் குற்றங்கள் நிரூபிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு நீதித்துறையினூடாக அதியுச்ச தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வடமாகாண கல்வித்துறையில் இடம்பெறும் பாலியல் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு விசாரணைக் குழுவொன்றினை உருவாக்குவதற்கும் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்துள்ளார்.

(இச்செய்தி ‘Today Jaffna’ என்ற இணையத்தளத்திலிருந்து பிரசுரிக்கப்படுகின்றது)

Tags: