பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்வு

பிரிட்டனில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பாக நடந்த போட்டியில் ஜெர்மி ஹண்ட்டை வென்று பிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பிரிட்டன் பிரதமர் தெரீசா மேயின் அமைச்சரவையில் இதுவரை பணியாற்றியது தனக்கு பெருமை என்று கூறியுள்ள போரிஸ் ஜான்சன், கன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பாக பிரதமர் பதவிக்காக நடந்த போட்டியில் வென்றது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.

பிரதமர் பதவிக்கான போட்டியில் ஜெர்மி ஹண்ட் 46, 656 வாக்குகள் பெற்ற நிலையில், போரிஸ் ஜான்சன் 92,153 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

இந்நிலையில், பிரிட்டன் பிரதமராக போரிஸ் ஜான்சன் அறிவிக்கப்பட்டதற்கு பிரிட்டனின் தற்போதைய பிரதமர் தெரீசா மே தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டார் போரிஸ் ஜான்சன்

தன் மீது கட்சி வைத்த நம்பிக்கைக்கு ஏற்ப தனது எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகள் இருக்கும் என்று கூறிய போரிஸ் ஜான்சன், அடுத்த சில நாட்களில் இது குறித்து தனது குழு பணியாற்றும் என்று கூறியுள்ளார்.

”எனது பிரசாரம் இத்துடன் முடிவடைந்த நிலையில், எனது பணிகள் இப்போது முதல் தொடங்குகிறது” என்று போரிஸ் ஜான்சன் மேலும் கூறினார்.

பிரிட்டனின் புதிய பிரதமரான போரிஸ் ஜான்சனுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

முன்னாள் லண்டன் மேயரான போரிஸ் ஜான்சன் புதன்கிழமையன்று பிரதமர் பதவிக்கான பொறுப்பை ஏற்கவுள்ளார்.

Afbeeldingsresultaat voor boris johnson cartoon

போரிஸ் ஜான்சன்: யார் இந்த பிரிட்டனின் புதிய பிரதமர்? 10 முக்கிய தகவல்கள்

பிரிட்டனின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்த போரிஸ் ஜான்சன் குறித்த பத்து சுவாரஸ்ய தகவல்களை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

  • போரிஸ் ஜான்சன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்தவர். பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்தார். 
  • அரசியலில் நுழைந்தபின், நாடாளுமன்ற உறுப்பினர், லண்டன் மேயர் மற்றும் வெளியுறவு செயலர் என தற்போது பிரதமராகி இருக்கிறார். ஆனால், இவருடைய ஒவ்வொரு வளர்ச்சியிலும் சர்ச்சைகள் கூடவே பயணப்படுகின்றன.
  • தி ஸ்பெக்டேட்டர் என்ற பிரிட்டன் வார இதழின் ஆசிரியராக போரிஸ் ஜான்சன் பணியாற்றியுள்ளார். குழப்பவாதியாகவும் அல்லது ஒழுங்கற்றவராகவும் போரிஸ் ஜான்சன் அறியப்படுகிறார்.
  • இவர் பத்திரிகை துறையில் இருந்தபோது, உள்ளூர் அதிகாரிகளால் ஒருபாலுறவு ஆதரவு பிரசாரங்களை ஊக்குவிக்கும் சட்டத்துக்கு எதிரான கருத்துகளை கேள்வியெழுப்பினார். பின்னர், அரசியலில் நுழைந்தவுடன், பொதுமக்களின் அந்தரங்க விஷயங்களில் அரசு தலையிடகூடாது என்று தன் நிலைப்பாட்டை மாற்றினார்.
  • வார இதழில் உண்மைக்கு புறம்பான சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்டதால் போரிஸ் ஜான்சன் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
  • 2001ல் ஹென்லி-ஆன்-தேம்ஸ் என்ற நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு முதல்முறையாக எம்பி ஆகிறார் போரிஸ் ஜான்சன். 2001லிருந்து 2008 வரை 7 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.
  • 2008ல் லண்டன் மேயர் தேர்தலில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார். 2008 லிருந்து 2016 வரை 8 ஆண்டுகள் லண்டன் மேயராக பதவி வகித்தார். தொடர்ந்து நான்கு ஆண்டுகள் யூக்ஸ்பிரிட்ஜ் மற்றும் தென் ரூய்லிப்பின் எம்பியாக நான்குகாண்டுகள் இருந்தார்.
  • பிரதமராவதற்குமுன், இரண்டாண்டுகள் (2016 லிருந்து 2018 வரை) வெளியுறவுத்துறை செயலராக பதவி வகித்தார்.
  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய நண்பராக அறியப்படும் போரிஸ், 2017 ஆம் ஆண்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற போது, முன்னறிவிப்பற்ற நியூயார்க் பயணத்தில், டிரம்பின் முக்கிய ஆலோசகர்களை சந்தித்துள்ளார். இது அப்போது, பெரும் விவாதத்தை கிளப்பியது.
  • ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா என்பது குறித்து நடைபெற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பின் போது, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறவேண்டும் என்று வலியுறுத்திப் பிரசாரம் செய்தவர் போரிஸ் ஜான்சன்.

-பிபிசி தமிழ்
23.07.2019

Tags: