முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ குற்றமற்றவரென நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டமை எவ்வாறு?

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஜூன் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தை விட்டு வெளியேறினார். தனது வெளியேற்றத்தை தெரிவிக்கும் முகமாக நடத்திய பத்திரிகை கலந்துரையாடலில் 2015 ஆம் ஆண்டு மீண்டும் இந்நாட்டிற்கு இரண்டு முக்கிய காரணங்களுக்காகவே வந்ததாக அவர் தெரிவித்தார்.

முதலாவது காரணம் தன்னால்தான் முன்னாள் ஜனாதிபதி பாதிப்புக்கு உள்ளானார் என சிலர் கூறும் குற்றச்சாட்டை சீர் செய்து அவருக்கு கௌரவமான ஒரு இடத்தை பெற்றுக் கொடுப்பதற்காக ஆகும்.

இரண்டாவது விடயம் தனக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளுக்கு முகம்கொடுத்து, தான் குற்றமற்றவர் என நிரூபிப்பதற்காகும். அவ்விதத்தில் பசில் ராஜபக்ஷ நீதிமன்றத்துக்கு முகம் கொடுத்து தனக்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்குகளிலிருந்து குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் இருந்து மல்வானை வீட்டை விலைக்கு வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கிற்கு நீதிமன்றத்தால் விடை கிடைத்துள்ளது.

சர்ச்சைக்குரிய மல்வானை சொத்து வழக்கில் பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசன் ஆகியோரை குற்றமற்றவர்கள் என விடுதலை செய்து கம்பஹா மேல்நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர ஜூன் 3 ஆம் திகதி தீர்ப்பினை தெரிவித்தார். அன்றையதினம் வழக்கின் பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தார்கள். அவர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான ஜி. ஏ.ஜி.வீரரத்ன, நவீன் மாரப்பன, சாலிய பீரிஸ் உள்ளிட்ட குழுவினர் ஆஜராகி இருந்தார்கள். முறைப்பாட்டிற்காக அரச சட்டத்தரணி கிறிஸங்க பெர்னாந்து ஆஜராகி இருந்தார்.

மல்வானை கதை:
வழக்கு இலக்கம் HC 26/17 கீழ் கம்பஹா உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. அவ்வழக்கு பசில் ரோகன ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசனுக்கு எதிரானதாகும். 17 ஏக்கர் காணியை விலைக்கு வாங்கி அதில் பெரிய சொகுசு வீடொன்றையும் மற்றும் நீச்சல் தடாகம் ஒன்றையும் அமைத்து அரச பணத்தை துஷ்பிரயோகம் செய்ததாக சட்டமா அதிபரால் மூன்று குற்றப் பத்திரங்களின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

குற்றச்சாட்டுகள்:

2010ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதி மற்றும் 2015 ஜூன் மாதம் 17ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த வழக்கில் இரண்டாவதாக குற்றம் சாட்டப்பட்டவரான திருக்குமார் நடேசனை பினாமியாக முன்வைத்து முதலாவது குற்றம் சாட்டப்பட்டவரான பசில் ராஜபக்ஷவினால் இலஞ்ச சட்டம் (19) ஆ,23(A) 70 பிரிவின் கீழ் குற்றம் ஒன்றோ அல்லது பலவோ புரிந்து சட்டவிரோதமாக சம்பாதித்த 250 மில்லியன் ரூபாவை செலவு செய்து கம்பஹா நீதிமன்ற அதிகார வரம்புக்கு உட்பட்ட மள்வானையில் காணியொன்றை விலைக்கு வாங்கி சொகுசு வீடொன்றையும் நீச்சல் தடாகம் ஒன்றையும், பண்ணை ஒன்றையும் அமைத்து அபிவிருத்தி செய்தது தொடர்பாகவே குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

சட்டவிரோதமாக சம்பாதித்த அப்பணம் இலங்கையில் முதலீடு செய்யப்பட்டு அப்பணத்தை துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக சூழ்ச்சி செய்தமை மற்றும் அந்தக் குற்றத்தை மேற்கொள்வது தொடர்பாக 2011 இலக்கம்40 என்னும் நிதி துஷ்பிரயோகத்தை தடுக்கும் சட்டத்தின் திருத்தப்பட்ட 206 இலக்கம் 5 என்னும் நிதி துஷ்பிரயோகத்தை தடுக்கும் சட்டத்தின் 3(2) மற்றும் 3(1) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை செய்துள்ளதாக பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. அத்துடன் அந்தக் குற்றத்திற்கு ஆதரவு வழங்கியது தொடர்பாக திருக்குமார் நடேசன் மீதும் மேலே குறிப்பிட்ட சட்ட விதிகளுக்கு அமைய குற்றம் சுமத்தப்பட்டது.

முன்னர் குறிப்பிட்டவாறு இந்த வழக்கு ஆரம்ப பிரதிவாதிகளான பசில் ராஜபக்ஷ மற்றும் திருக்குமார் நடேசனுக்கு எதிரான குற்ற முறைப்பாடுகளை நிரூபிப்பதற்காகவே நடத்தப்பட்டு வந்தது. முறைப்பாடாளர்களின் சாட்சிகள் அந்த அடிப்படையிலேயே விசாரிக்கப்பட்டனர்.

இந்த காணியின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் அனைத்து ஜோதிட நடவடிக்கைகள் சுமணதாச அபேகுணவர்தனவால் மேற்கொண்டதாக கூறப்பட்டிருந்தது. பசில் ராஜபக்ஷவின் ஒருத்தொட்ட காரியாலயத்துக்கு சுப நேரத்தை கணித்துக் கொடுத்தவர் சுமனதாச அபேகுணவர்தன ஆவார். இந்த அனைத்து சாட்சிகளும் வழக்குக்கு தொடர்பில்லாத சாட்சிகளாகும்.

அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட அழுத்தம்:
பசில் ராஜபக்ஷவின் கம்பஹா ஒருதொட்ட காரியாலயத்தில் காரியாலய உதவியாளராக நடவடிக்கையில் ஈடுபட்ட கசுன் பிரியங்க என்பவரின் சாட்சி நீதிமன்றத்தின் விசேட கவனத்தை பெற்றது. அவர் அவ்வேளையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் தற்காலிக காரியாலய பணியின் உதவியாளராக பணிபுரிந்த நபராவார். அவர் இரண்டு நாட்கள் நிதிக்குற்ற விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அவர் தான் வாழ்வதற்காக தன்னுடைய வேலையை தவிர மேலதிகமாக சிறு சிறு வேலைகளை செய்வதாக கூறியிருந்தார். இந்த சொத்துக்களின் கட்டடநிர்மாண கலைஞர் முதித்த ஜயக்கொடியின் வேலைகளை செய்வதற்காக 2014 மார்ச் ஏப்ரல் மாதமளவில் அவர் அந்த காணி அமைந்துள்ள இடத்திற்கு சென்றதாகக் கூறியுள்ளார். அவர் பசில் ராஜபக்ஷ பற்றியோ நடேசரன் பற்றியோ நீதிமன்றத்தில் எதுவும் கூறி இருக்கவில்லை.

சாட்சி தொடர்ந்து சாட்சியமளிக்கும் போது பொலிசார் தான் கூறியவற்றை பதிவு செய்யும் போது தான் கூறியவற்றை பதியாமல் அவர்களுக்கு தேவையானதையே எழுதிக் கொண்டதாகக் கூறினார். அதுபற்றி பொலிஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்தபோதும் தான் கூறாதது பற்றி எழுதி தன்னுடைய கையெழுத்தையும் பெற்றுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

பொலிசார் பாரபட்சமாக முதலாவது குற்றம்சாட்டப்பட்டவரின் குற்றத்தை நிரூபிக்கும் நோக்கத்திலேயே சாட்சியை அச்சுறுத்தி உள்ளதாக தெரிகிறது என நீதிமன்றம் தெரிவித்தது. சாட்சியின் சாட்சியங்களிலிருந்து முதலாவது இரண்டாவது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பற்றி அல்லாது பொலிசாரின் முறையற்ற நடத்தை குறித்தே தெரிகிறது என நீதிமன்றம் தெரிவித்தது.

வழக்கின் ஆரம்ப சாட்சி முறைப்பாட்டை முன்வைத்ததாக கூறப்படும் உப்புல் ராமவிக்ரம என்னும் ஒப்பந்தக்காரருடையது. குற்ற வழக்கு ஒன்றின் ஆரம்ப சாட்சி வழக்கை தாக்கல் செய்வதற்காக முதன் முறை முறைப்பாட்டை செய்தவராவார். வழக்கு அதன் அடிப்படையையே கொண்டிருக்கும். வழக்கின் அடிப்படை சாரமும் அதுவே. ஆனால் முறைப்பாட்டின் சாட்சியை நெறிப்படுத்தும் போது இடைநடுவில் இந்த சாட்சி கூறும் போது அவர் ஒருபோதும் இந்த வழக்கு தொடர்பாக முறைப்பாடொன்றை செய்யவில்லை என தெரிவித்தார்.

பிரச்சினை இருந்தது முதித்த ஜெயக்கொடி உடனாகும். அவருக்கு ஒப்பந்தத்தை வழங்கியது முதித்த ஜயகொடியே. முதித்த ஜெயக்கொடி ஒப்பந்தக்காரருக்கு 30 மில்லியன் ரூபாவை செலுத்தத் தவறியுள்ளார். நிதி குற்ற விசாரணைப் பிரிவின் தலைவராக அப்போது நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரி “காசை பெற்றுத் தருகிறேன்”என்று உறுதியளித்து அவரிடம் எதற்கோ கையெழுத்தை பெற்றுக் கொண்டதாக அவர் கூறினார். கையெழுத்து பெற்றுக் கொண்டாலும் அதில் என்ன எழுதியிருந்தது என தன்னுடைய சாட்சியத்தை பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அவருக்கு முதித்த ஜயக்கொடியிடமிருந்து பணத்தை பெறுவதே அவசியமாக இருந்ததை தவிர வேறு எந்த முறைபாட்டையும் செய்வதற்கு அல்ல என்றும் அவர்நீதிமன்றத்தில் கூறினார்.

சாட்சி நீதிமன்றத்தில் இன்னுமொரு விடயத்தையும் தெரிவித்தார். அவர் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு ஒரு பக்கத்திலான சிறிய சாட்சியத்தை அளித்ததாகவும் ஆனால் நீதிமன்றத்தில் அவருக்கு காட்டப்பட்டது நான்கு பக்கங்கள் கொண்ட நீண்ட சாட்சியமாகும் . அவர் அறிந்த வரையில் இவ்வாறு நீண்ட சாட்சியத்தை அவர் வழங்கவில்லை என உறுதி செய்தார். அடுத்த விடயம் கையெழுத்து. சாட்சி கூறுகையில், இந்த கையெழுத்து தன்னுடைய கையெழுத்தை ஒத்ததாக இருந்தாலும் நூற்றுக்கு நூறு வீதம் அது தன்னுடையகையெழுத்து அல்ல என தெரிவித்தார். முறைப்பாடு நபர் ஒருவரை தவறாக இட்டுச் சென்று அவரை ஆரம்ப முறைப்பாட்டாளராக முன்வைத்ததும் அல்லாமல் அவர் அளிக்காத சாட்சியத்துக்கு அவரது கையெழுத்தை களவாக இட்டுள்ளதாகவும் அவர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.

முதித்த ஜயக்கொடியின் சாட்சியத்தின் நம்பிக்கையற்ற தன்மையாக ஒரு சிக்கலான சாட்சியம் முன்வைக்கப்பட்டுள்ளது. அது இந்த சொத்து தொடர்பாக முக்கிய பாத்திரத்தை நடித்த கட்டட நிர்மான கலைஞர் முதித்த ஜயக்கொடியினுடையது.

அவர் நீதிமன்றத்தில் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு தவறான சாட்சியத்தை அளித்த சாட்சியாவார். இந்தச் சாட்சி மிக நன்றாக தொழில்ஞானம் உடைய நபராவார். அவ்வாறான ஒருவர் தான் பொய் கூறியதை நீதிமன்றத்தின் முன் ஏற்றுக் கொண்டதை பாரதூரமான விடயமாக நீதிமன்றம் பார்த்தது. உண்மையான பொய்யான விடயங்கள் இரண்டும் கலந்து காணப்பட்டால் அந்த சாட்சியத்தை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்பதை சட்டம் ஏற்றுக் கொண்டுள்ளது. நீதிமன்றம் முதித்த ஜயக்கொடியின் சாட்சியத்தை அந்த புரிந்துணர்வுடனேயே விசாரித்தது.

பசில் ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில் இந்த காணியை திருக்குமார் நடேசனின் பெயரில் விலைக்கு வாங்க எடுக்கப்பட்ட விதம், பசில் ராஜபக்ஷவின் கருத்துக்கு அமைய 2011ஆம் ஆண்டில் சி ஐ சி நிறுவனத்துடன் இணைந்து மாதிரி பண்ணையை உருவாக்கும் விதம், 2013-இல் பசில் ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில் பண்ணை ஒன்றை அமைக்க ஆரம்பித்த விதம் பற்றி அவர் நீதிமன்றில் தெரிவித்தார்.

அவர் குற்றம் சாட்டப்பட்டவர்களுடனோ அல்லது ஒப்பந்தக்காரர்களுடனோ எந்த ஒரு ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். பின்னர் ஒப்பந்தகாரருக்கும் தனக்கும் இடையே மோதல் ஒன்று ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். சாட்சியாளர் சாட்சியத்தை வழங்கும்போது காணப்பட்ட பரஸ்பர விரோதத்தை நீதிமன்றம் அவதானித்துள்ளது. அவரது சாட்சியத்தில் காணப்பட்ட நம்பிக்கையற்ற தன்மையை தெளிவுபடுத்த 30 க்கும் அதிகமான பக்கங்கள் வழக்கு அறிக்கையில் ஒதுக்கப்பட்டிருந்தது.

தீர்ப்பு:
முறைப்பாட்டின் சாட்சிகளில் எதுவித சாதகமான உறுதிப்படுத்தல்களும் பிரதிவாதிகளுக்கு எதிராக நடைபெறவில்லை. ஆரம்ப சாட்சியமே தகர்ந்து போனது. ஆரம்ப சாட்சியாளர் இல்லாமல் குற்ற விசாரணை வழக்கொன்றை நடத்திச் செல்வதற்கான அடிப்படை இல்லை. இந்த நிலைமையின் கீழ் முறைப்பாட்டை நெறிப்படுத்திய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்துக்கு முதலாவது சாட்சியாளரின் சாட்சியத்தை தொடர்ந்தும் நெறிப்படுத்த முடியாது என நீதிமன்றத்தில் தெரிவித்ததோடு, மேலும் பட்டியலிடப்பட்டுள்ள சாட்சிகளை தொடர்ந்தும் நெறிப்படுத்தாமல் முறைப்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவதாக தெரிவித்தார்.

முறைப்பாட்டை நெறிப்படுத்திய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் முறைப்பாடுமுடிவுக்கு வந்துள்ளதாக நீதிமன்றத்துக்கு அறிவித்ததாவது பல சாட்சிகளை நெறிப்படுத்தி முறைப்பாட்டை நிறைவு செய்துள்ளதால் பிரதியின் வாய்மொழியிலான சாட்சியத்தை அழைப்பதா இல்லையா என நீதிமன்றத்தால் முடிவு செய்து உத்தரவு பெற்றுக் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

முறைப்பாட்டை நெறிப்படுத்திய பிரதி சொலிசிட்டர் ஜெனரல் தொடர்ந்தும் முறைப்பாட்டின் சாட்சிகளை நெறிப்படுத்த போவதில்லை என அறிவித்து முறைப்பாடு முடிவு பெற்றதாக நீதிமன்றத்துக்கு அறிவித்ததோடு நீதிமன்றத்தால் ஆராய வேண்டி இருந்தது முறைப்பாட்டின் பொறுப்பான உறுதி செய்யும் கடமையை நெறிப்படுத்தியுள்ள சாட்சியங்கள் மூலம் நிறைவேற்றப்பட்டு உள்ளதா இல்லையா என்பதாகும். அதாவது முதலாவது குற்றஞ்சாட்டப்பட்டவரான பசில் ராஜபக்ஷவால் முறையற்ற விதத்தில் சம்பாதித்த பணத்தை பயன்படுத்தி இரண்டாவது குற்றஞ்சாட்டப்பட்டவரான நடேசன் என்பவரின் பெயரால் காணியை விலைக்கு வாங்கி வீடு ஒன்றை அமைத்து அதன்மூலம் பண துஷ்பிரயோகத்தை தடுக்கும் சட்டத்தை மீறி உள்ளாரா என்பதை உறுதி செய்யப்பட்டுள்ளதா என்பது தொடர்பிலாகும்.

நீதிமன்றத்தின் அனைத்து பகுப்பாய்வுகளானது நிதி துஷ்பிரயோகத்தை தடுக்கும் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு குற்றவாளிகளாக்கி குற்றத்தின் பொறுப்பை சுமத்துமளவுக்கு சாதாரண சந்தேகங்கள் இன்றி முறைப்பாட்டை உறுதிசெய்ய தவறி உள்ளதாக தெரிவிக்கின்றது.

“மேலும் இந்த வழக்கில் பிரதிவாதி வாக்குமூலம் அளிக்க அழைக்கப்படத் தேவையில்லை. அதனால் குற்ற விசாரணை வழக்கு விதிமுறை சட்டத்தின் 200(1) நடவடிக்கை மேற்கொண்டு குற்றம் சுமத்தப்பட்டவர்களை இந்த வழக்கிலிருந்து குற்றமற்றவர்களாக விடுதலை செய்கிறேன்” என உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பை வழங்கினார்.

தமிழில்: வீ.ஆர். வயலட்

Tags: