“எங்கள் எதிரிகள் உங்கள் நிலத்தை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்” – வளைகுடா நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை

நீங்கள் வளர்ச்சியையும் பாதுகாப்பையும் விரும்பினால், எங்கள் எதிரிகள் உங்கள் நிலங்களிலிருந்து போரை நடத்த அனுமதிக்காதீர்கள்” என்று ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் வளைகுடா நாடுகளுக்குக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “ஈரான் முன்கூட்டியே தாக்குதல்களை நடத்தாது என்று நாங்கள் பலமுறை கூறியுள்ளோம். ஆனால் எங்கள் உள்கட்டமைப்பு அல்லது பொருளாதார மையங்களை குறிவைத்தால், அதற்கு நாங்கள் வலுவாக பதிலடி கொடுப்போம்.

பிராந்திய நாடுகளுக்கு: நீங்கள் வளர்ச்சியையும் பாதுகாப்பையும் விரும்பினால், எங்கள் எதிரிகள் உங்கள் நிலங்களிலிருந்து போரை நடத்த அனுமதிக்காதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் நகரில் மறைந்திருந்த அமெரிக்க இராணுவத்தின் இரண்டு இரகசிய முகாம்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இந்த முகாம்களில் சுமார் 500 இற்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் இருந்ததாகவும், இந்தத் தாக்குதலில் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இருப்பினும், இது குறித்த அதிகாரபூர்வ தகவலை அமெரிக்கா இன்னும் வெளியிடவில்லை. மறுபுறம், ஈரானுக்கு எதிரான போரைத் தீவிரப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக, ஈரானின் 90 சதவீத கச்சா எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை தரைவழித் தாக்குதல் மூலம் கைப்பற்ற அமெரிக்கா ஆலோசித்து வருகிறது.

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள இந்தப் பதற்றம், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது. 

அமெரிக்க இராணுவத்தை அனுமதிக்க கூடாது: வளைகுடா நாடுகளுக்கு ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் அறிவுறுத்தல்

பாது​காப்​பு, அமைதி மற்​றும் வளர்ச்​சியை விரும்​பி​னால், அமெரிக்க இராணுவம் தங்​கள் நாட்​டில் இருந்து செயல்பட வளை​குடா நாடு​கள் அனு​ம​திக்க கூடாது என ஈரான் அதிபர் மசூத் பெஸ்​கி​யான் கூறி​யுள்​ளார்.

ஈரான் மீது அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேல் கடந்த மாதம் 28 ஆம் திகதி போர் தொடுத்​தது. இதற்கு பதிலடி கொடுக்​கும் ஈரான், வளை​குடா நாடு​களில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்​கள் மற்​றும் மையங்​கள் மீது தாக்​குதல் நடத்தி வரு​கிறது. இங்​கிருந்து அமெரிக்க போர் விமானங்​கள் புறப்​பட்டு சென்று ஈரான் மீது தாக்​குதல் நடத்​துகின்​றன.

துபா​யில் தாக்​குதல்: ஐக்​கிய அரபு இராச்சியத்​தில் உள்ள அமெரிக்க இராணுவத்​துக்கு உதவி​யாக, ட்ரோன் எதிர்ப்பு ஆயுதங்​களை உக்​ரைன் வழங்​கி​யுள்​ளது. இந்த ஆயுதங்​கள் துபா​யில் உள்ள ஒரு கிடங்​கில் வைக்​கப்​பட்​டிருந்​தன. அந்த இடத்தை தாக்​குதல் நடத்தி அழித்​துள்​ள​தாக ஈரான் இராணுவ தலை​மையகம் கதம் அல்​-அன்​பியா கூறி​யுள்​ளது. மேலும், துபா​யில் பதுங்​கி​யுள்ள அமெரிக்க இராணுவத்​தினர் மீது தாக்​குதல் நடத்தப்பட்ட​தாக ஈரான் தெரி​வித்​துள்​ளது.

இந்​நிலை​யில் ஈரான் அதிபர் மசூத் பெஸ்​கி​யான் வெளி​யிட்​டுள்ள செய்​தி​யில், ‘‘பாதுகாப்​பு, அமைதி மற்​றும் வளர்ச்​சியை விரும்​பி​னால், அமெரிக்க இராணுவம் தங்கள் நாட்​டில் இருந்து செயல்பட வளை​குடா நாடு​கள் அனு​ம​திக்க கூடாது. நாங்​கள் எப்​போதும் முதலில் தாக்​குதல் நடத்​துவதில்லை. ஆனால், எங்​கள் மீது தாக்​குதல் நடத்தப்​பட்​டால்​, பதிலடி கொடுப்​போம்​’’ என தெரி​வித்​துள்​ளார்​.

பேச்சுவார்த்தைக்கு நம்பிக்கை தேவை: ஈரான் – அமெரிக்கா இடையே சமரசப் பேச்சுவார்த்தை நடத்தும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக சவுதி அரேபியா, எகிப்து, மற்றும் துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர்களும் பாகிஸ்தானில் இன்றும் (29.03.2026) நாளையும் ஆலோசனை நடத்துகின்றனர். இதை வரவேற்றுள்ள ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான், பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஷ் ஷெரீப்பிடம் பேசுகையில், “போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நம்பிக்கை தேவை” என கூறியுள்ளார்.

Tags: