ராவுல் காஸ்ட்ரோவை அவமதிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு சர்வதேச கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம்

கியூபாவிற்கும் அந்நாட்டின் புரட்சிகரத் தலைவர் ராவுல் காஸ்ட்ரோவிற்கும் எதிராக அமெரிக்கா எடுத்து வரும் சமீபத்திய ந டவடிக்கைகளுக்கும் , அந்நாட்டுக்கு விடுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சிகள் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.

சோசலிச கியூபாவை சீர்குலைக்கவும், அங்கு இராணுவத் தாக்குதல் நடத்துவதற்கான சூழலை உருவாக்கவும் ஏகாதிபத்தியவாதிகள் எடுத்துள்ள புதிய முயற்சியின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கைகள் என அக்கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

1996 ஆம் ஆண்டு மியாமியை தளமாகக் கொண்டு செயல்பட்ட, கியூபாவுக்கு எதிரான “பிரதர்ஸ் டு தி ரெஸ்க்யூ” (Brothers to the Rescue) என்ற அமைப்பின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. இந்தச் சம்பவம் தொடர்பான பல ஆண்டுகள் பழமையான வழக்கை அமெரிக்க நீதித்துறை மீண்டும் கையில் எடுத்துள்ளது.

அதில் ராவுல் காஸ்ட்ரோவை சிக்கவைக்கவும் முயற்சிகள் நடக்கின்றன.

இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரைகைது செய்வதாகக் காட்டி கியூபா மீது போர் தொடுக்கவும் அமெரிக்கா திட்டமிட்டு வரும் நிலையில், இந்தக் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இந்தியா, ஐரோப்பா, இலத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், சர்வதேச சட்டங்களின்படி சட்டவிரோத மானது என்றும் சாடியுள்ளன.

கியூபா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் தொடரும் நிலையில், அந்நாட்டின் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவை தெரிவித்துள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு புதுதில்லியில் உள்ள ஹர்கிஷன் சிங் சுர்ஜித் பவனில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மத்திய குழுக் கூட்டத்தில் “கியூபா தனித்து விடப்படவில்லை; கியூபாவை விட்டு அமெரிக்கா வெளியேற வேண்டும்” என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் (CPI) அமெரிக்காவின் இந்தநடவடிக்கையை கடுமையாகக் கண்டித்துள்ளது.

இது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், கியூபாவிற்கு எதிராக அடுத்தடுத்து வந்த அமெரிக்க அரசாங்கங்கள் பின்பற்றி வரும் நீண்டகால விரோதப் போக்கின் ஒரு பகுதி என்றும் அது கூறியுள்ளது.

வெளிநாட்டுத் தலையீடுகள் இன்றி தனது சொந்த அரசியல் மற்றும் பொருளாதாரப் பாதையைத் தீர்மானிக்கும் கியூபாவின் உரிமையை ஆதரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய மற்றும் சர்வதேச நாடுகளின் கண்டனம் போலியான விசாரணை ராவுல் காஸ்ட்ரோவுக்கு எதிரான இந்த நடவடிக்கை “ஒரு போலியான அரசியல் விசாரணை” என்று கண்டிக்கப்பட் டுள்ளது.

கியூபா மீது குண்டுவீசவும் போர் தொடுக்கவும் சட்டப்பூர்வக் காரணத்தை உருவாக்க அமெரிக்கா முயல்கிறது என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி ரால் காஸ்ட்ரோவுக்கு எதிரான அமெரிக்காவின் கைது உத்தரவை கிரீஸ் கம்யூனிஸ்ட் கட்சி (KKE) கடுமையாக கண்டித்துள்ளது.

‘யுஎஸ்எஸ் நிமிட்ஸ்’ (USS Nimitz) விமானந்தாங்கிப் போர்க்கப்பலை அந்நாட்டுக்கு அருகே நிறுத்துவது உள்ளிட்ட கியூபாவுக்கு எதிரான இராணுவ மிரட்டலின் ஒரு பகுதியே இந்த நடவடிக்கை என்றும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இந்த விவ காரத்தில் ஐரோப்பிய அரசாங்கங்கள் மௌனம் காப்பதையும் கடுமையாக விமர்சித்துள்ளது.

இத்தாலி (PCI), ஸ்பெயின் (PCE) மற்றும் போர்ச்சுகல் (PCP) கம்யூனிஸ்ட் கட்சிகள் ராவுல் காஸ்ட்ரோ மீதான அமெ ரிக்காவின் குற்றச்சாட்டைக் கண்டித்துள்ளதோடு, இது கியூபாவுக்கு எதிரான இராணுவத் தாக்குதலுக்கும் ஆக்கிரமிப்பிற்கும் வழிவகுக்கும் ஆபத்தான நடவடிக்கை என்று கூறியுள்ளன.

கியூபா மீதான குற்றச்சாட்டு அமெரிக்காவின் அரசியல் நாடகம் என்று பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி (CPB) விமர்சித்துள்ளது.

பன்றிகள் வளைகுடா படையெடுப்பு (Bay of Pigs invasion), கியூப தலைவர்களைக் கொலை செய்ய முயன்றது, பயங்கரவாத குண்டு வெடிப்புகள் என அமெரிக்கா பல ஆண்டுகளாக கியூபாவிற்கு எதிராகச் செய்து வரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் இலத்தீன் அமெரிக்காரால் காஸ்ட்ரோ மீதான குற்றச்சாட்டு, வரும் நாட்களில் கியூபா மீது போர் தொடுப்பதற்கான காரணத்தை உருவாக்கி அதை நியாயப்படுத்துவதற்காகத் திட்டமிடப்பட்ட ஒரு ஆக்கிரமிப்புச் செயலாகும் என்று தென் ஆபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி (SACP) தெரிவித்துள்ளது.

மாறி வரும் பன்முனை உலகில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விரக்தியையே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன என்றும் கூறியுள்ளது.

துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி ராவுல் காஸ்ட்ரோ மீதான குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி கூ றியுள்ளது .

1 9 9 6 இல் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானங்கள் கியூபாவின் வான்வெளியில் தொடர்ந்து அத்துமீறியதாகவும், அந்த விமானங்களை சுட்டு வீழ்த்தியது கியூபாவின் இறையாண்மை மற்றும் தற்காப்பு உரிமைக்கு உட்பட்டதே என்றும் அது குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி 1996 இல் வான்வெளியைப் பாதுகாக்க கியூபா எடுத்த முடிவு சர்வதேசச் சட்டத்தின் கீழ் முறையான தற்காப்பு நடவடிக்கையே என்று அவுஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சி (CPA) கூறியுள்ளது.

இலத்தீன் அமெரிக்க நாடுகளான மெக்சிகோ, பிரேசில், அர்ஜெண்டினா, சிலி ஆகிய நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ராவுல் காஸ்ட்ரோ மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை “வேடிக்கையான மற்றும் வெட்கக்கேடான” முயற்சி என்று கண்டித் துள்ளன.

“கியூபா தனித்து விடப்படவில்லை” பல்வேறு நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களது அறிக்கைகளில், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகப் பல ஆண்டுகளாக கியூபா காட்டி வரும் எதிர்ப்பைப் பாராட்டியுள்ளன.

கியூபப் புரட்சியை ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தின் மற்றும் சமூக முன்னேற்றத்தின் அடையாளமாகப் புகழ்ந்துள்ளன. கியூபாவின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஆதரவு பிரச்சாரங்களை வலுப்படுத்தவும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் மற்றும் அச்சுறுத்தல்களை உடனடியாக நிறுத்தவும் அக்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

“கியூபா தனித்து விடப்படவில்லை” என்பதை பிரகடனப்படுத்தி, தீவிரமடைந்து வரும் அமெரிக்காவின் தடைகள் மற்றும் அழுத்தங்களுக்கு எதிராக கியூப மக்கள், கியூபப் புரட்சி மற்றும் ராவுல் காஸ்ட்ரோ ஆகியோருக்கு உலகெங்கிலும் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.

Tags: