அமெரிக்காவைவிட ஆபிரிக்கா பெரிதாக இருக்கும் புதிய உலக வரைபடத்துக்கு ஐ.நா. சபை ஒப்புதல்

பு​திய உலக வரைபடம் தொடர்​பான தீர்​மானம் ஐ.நா. சபை​யில் நேற்று பெரும்​பான்மை ஆதர​வுடன் நிறைவேற்​றப்​பட்​டது. இதன்​படி ஆப்​பிரிக்க கண்​டம் பெரி​தாக​வும் வடஅமெரிக்​கா, ஐரோப்​பிய கண்​டம் சிறிய​தாக​வும் மாற்​றப்​பட்டு உள்​ளன.

ஆபிரிக்கா மற்றும் பிற நிலநடுக்கோட்டுப் பிரதேசங்களின் தோற்றத்தை வழக்கமான உலக வரைபடங்கள் தவறாகப் பிரதிபலிப்பதாக வாதிட்டு, ஆபிரிக்க யூனியன் (African Union) சார்பில் டோகோ (Togo) நாடு இந்த முன்னெடுப்புக்குத் தலைமை தாங்கியது.

கடந்த 1569 ஆம் ஆண்​டில் நெதர்​லாந்​தைச் சேர்ந்த புவி​யியல் ஆராய்ச்​சி​யாளர் கெரார்​டஸ் மெர்கேட்​டர் (Gerardus Mercator) உலக வரைபடத்தை உரு​வாக்​கி​னார். இதில் பூமத்​திய ரேகைக்கு அரு​கில் உள்ள பகு​தி​கள் சிறிய​தாக​வும் துரு​வப் பகு​தி​கள் பெரிய​தாக​வும் காட்​டப்​பட்​டன. உதாரணமாக மெர்​கேட்​டரின் உலக வரைபடத்​தில் கிரீன்​லாந்து தீவும் ஆபிரிக்க கண்​ட​மும் ஒரே அளவாக காட்​சி​யளித்​தன. ஆனால் கிரீன்​லாந்​தை​விட ஆப்​பிரிக்க கண்​டம் 14 மடங்கு பெரியது ஆகும்.

இதைத் தொடர்ந்து ஆபிரிக்​கா​வின் உண்​மை​யான நிலப்​பரப்பை பிர​திபலிக்​கும் புதிய உலக வரைபடத்தை ஐ.நா. சபை​யில் ஆபிரிக்க நாடு​கள் சமர்ப்​பித்​தன. இதுதொடர்​பான தீர்​மான​மும் கொண்டு வரப்​பட்​டது. இந்​தத் தீர்​மானம் மீது ஐ.நா. சபை​யில் செப்டம்பர் 4ஆம் திகதி வாக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது.

இந்​தியா உட்பட 164 நாடு​கள் தீர்​மானத்​துக்கு ஆதர​வாக வாக்​களித்​தன. உக்​ரைன், எஸ்​டோனி​யா, ஜோர்​ஜி​யா, லிது​வேனி​யா, மால்​டோ​வா, செர்​பியா ஆகிய 6 நாடு​கள் வாக்​கெடுப்​பில் பங்கேற்கவில்லை. அமெரிக்கா மட்​டும் தீர்​மானத்​துக்கு எதி​ராக வாக்​களித்​தது.

இதுதொடர்​பாக அமெரிக்க தூதர் யரினா பெரென்​செ​விச் கூறும்​போது, உலகம் எதிர்​கொள்​ளும் உண்​மை​யான பிரச்​சினை​கள் குறித்து ஐ.நா. சபை கவனம் செலுத்த வேண்​டும். 16 ஆம் நூற்றாண்டு உலக வரைபடத்தை மாற்​று​வ​தில் எந்​தப் பயனும் இல்​லை” என்​றார்.

கண்டங்களின் ஒப்புமைப் பரப்பளவை மிகவும் துல்லியமாகப் பாதுகாப்பதற்காக 2018 ஆம் ஆண்டில் ஈக்குவல் எர்த் (Equal Earth) கணிப்பு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. நிலப்பரப்பின் துல்லியமான பிரதிநிதித்துவம் அவசியமான இடங்களில், ஈக்குவல் எர்த் அல்லது பிற சம-பரப்பு (Equal-area) கணிப்பு முறைகளைப் பயன்படுத்துமாறு அரசாங்கங்கள், கல்வி நிறுவனங்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களை ஐ.நா. தீர்மானம் ஊக்குவிக்கிறது.

புதிய உலக வரைபடத்​தின்​படி ஆபிரிக்க கண்​டம் பெரி​தாக​வும் வடஅமெரிக்​கா, ஐரோப்​பிய கண்டம் சிறிய​தாக​வும் மாற்​றப்​பட்டு உள்​ளன. இந்​தி​யாவை பொறுத்​தவரை மிகப்​பெரிய மாற்​றம் ஏதுவும் இல்​லை. ஆபிரிக்க நாடு​கள் உடனான உறவை புதுப்​பிக்க பிரிட்​டன், பிரான்​ஸ், ஜெர்​மனி உள்​ளிட்ட நாடு​கள் விரும்​பு​கின்​றன. இதன் காரண​மாக பெரும்​பாலான ஐரோப்​பிய நாடு​கள் புதிய உலக வரைபடத்​துக்​கு ஆதர​வாக வாக்​களித்​துள்​ளன.

Tags: